ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வது பற்றி ஆலோசனை!

தொடக்க கல்வி இயக்குனரகம், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்க படவேண்டும்  என  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி(TET) தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-லிருந்து நடைமுறையில் உள்ளது.

ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பலர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேர்வு எழுத கால அவகாசம் தந்தும் பலர் தேர்சி அடையாமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பணியில் இருப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்க பட்டு பணி நீக்கம் செய்யபடுவார்கள்  என்று செய்தி வெளியாகி உள்ளது.

Scroll to Top