TN Supplementary Exam Hall Ticket 2021
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு:
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நுழைவுச் சீட்டு இன்று (ஜூலை 31) வெளியிடப்படவுள்ளது.
ஹால் டிக்கெட் தகவல்கள்:
இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத, மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
நுழைவுச் சீட்டுகான தேதி மற்றும் நேரம்:
31/07/2021 இன்று காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த துணைத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!