தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 2,900 கள உதவியாளர் பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, தேர்வு நடத்தப்படவில்லை.
- உதவி பொறியாளர்,
- இளநிலை உதவியாளர்
உள்ளிட்ட பதவிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.
- 1,300 கணக்கீட்டாளர்,
- 500 இளநிலை உதவியாளர்,
- 600 உதவி பொறியாளர்
பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, 2020-ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பழைய அறிவிப்புகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!