ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பு!

ஆதார் அட்டை:

மக்களிடம் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. வங்கி சேவைகளை பெறவும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் தேவையான விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையாக ஆதார் இருக்கிறது. மேலும் ஆதார் அட்டையில் உங்களது விவரங்கள் எந்த தவறுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பெயர், முகவரி, மொபைல் எண், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகிய விவரங்கள் கட்டாயம் எந்தவித பிழையும் இன்றி இருக்க வேண்டும்.

அதில் எதாவது மாற்றம் இருந்தால் UIDAIன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அதனை மாற்றிக் கொள்ளலாம். தற்போது அனைத்து சேவைகளும் பெற ஆதார் அவசியமாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் முகமை (UIDAI ) தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்றவர்கள், தற்போது வரை புதிய விவரங்களை சேர்க்காமல் இருந்தால், உடனே அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை அதற்கான கட்டணம் செலுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க ‘மை ஆதார்’ இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ செய்யலாம் என தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Scroll to Top