தாசில்தார்களுக்கு ஊதிய உயர்வு! தமிழக அரசு உத்தரவு!! உடனே பாருங்க!

தாசில்தார்களுக்கு ரூ.37,700/- சம்பளம் நிர்ணயம் – தமிழக அரசு உத்தரவு!!

வருவாய்த் துறையில் பணியாற்றும் தாசில்தார்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.37,700/- தற்போது நிர்ணக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊதிய குறைபாடு:

சமீபத்தில் முன்னாள் நீதிபதி தலைமையில் ஊதிய குறைபாடு தீர்க்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைகளை தீர்க்க மனுக்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது தமிழக வருவாய் நிர்வாக ஆணையரிடம் இருந்து தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊதிய நிர்ணயம்:

தமிழக வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவிப்பில், தாசில்தாரர்களுக்கு அடிப்படை தர நிர்ணயம் ஆனது குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய மறுசீரமைப்பு நாள்: 

இந்த ஊதிய மறுசீரமைப்பை வரும் ஜனவரி 31ம் தேதிகள் சேயல்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் முன்மொழிவுகளை தயார் செய்து மாநில கணக்காயருக்கு அனுப்பிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Leave a comment