வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு: உயர்கல்வித்துறை உத்தரவு!!

தமிழக உயர்கல்வித் துறை தெரிவிப்பு: 

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மாணவர் மூலம் நிரப்பலாம் என்று தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர் சேர்க்கையின்போது, வன்னியர்களுக்கான 10.5 % சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருப்பின், அதனை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை, மற்றோர் பிரிவு மாணவர் மூலம் சுழற்சி முறையில் நிரப்ப தமிழக உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், தென் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் காலி இடங்கள் இருப்பின் அதனை வன்னியர்கள் மூலம் நிரப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!