புதிய ரேஷன் கார்டு பெற 10 லட்சம் பேர் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!!!

புதிய ரேஷன் அட்டை:

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் 67,051 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிப்பு: 

அதேபோல் கடந்த 5 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 59,495 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர். அரசின் சலுகைகளைப் பெற மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் பத்து லட்சத்திற்கு அதிகமாகன விண்ணப்பங்கள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கடந்த செப்.26 வரை 10.54 லட்சம் பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். அதில் 7.28 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கப்பட்ட விண்ணப்பித்த 6.65 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!