TN DGE 10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டு இன்று வெளியீடு!!

தமிழக அரசு அறிவிப்பு:

10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு நாளை 08.09.2021 (புதன்கிழமை) இன்று காலை 11 மணி வெளியிட இருப்பதாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்கம் அறிவித்துள்ளது.

TN DGE துணைத்தேர்வுகள்:

கடந்த மாதம் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 13.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

அரசுத் தேர்வுகள் துறை இயக்கம் அறிவிப்பு:

தனித்தேர்வர்கள் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வர்களுக்கு உரிய நுழைவு சீட்டு இல்லாமல் தேர்வெழுத அனுமதி இல்லை என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்கம் அறிவித்துள்ளது.

TN 10th, 11th நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை:

  • நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு மாணவர்கள் முதலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின்னர், அதில் HALLTICKET என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது 10ம் வகுப்பு துணைத்தேர்வு மாணவர்கள், ‘SSLC SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 – HALL TICKET DOWNLOAD’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டினை பெற இருக்கும் மாணவர்கள், ‘HSE FIRST YEAR SUPPL. EXAMINATION SEPTEMBER 2021 – HALL TICKET DOWNLOAD’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வு மையத்தின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TN DGE Supplementary Hall Ticket 2021 Download

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.