10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு!! இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

துணைத்தேர்வு ஹால்டிக்கெட்:

10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு, தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வழியாக இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) இன்று 08.09.2021 (புதன்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதே போல 10, 11 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவர்களுக்கு அனுமதி சீட்டில் உள்ள தேர்வு மையத்தில் 13.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய இரு தினங்களில் செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்களுக்கு தனித்தேர்வுகள் அனுமதி சீட்டில் உள்ள தேர்வு மையத்தின் தலைமையாசிரியரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN DGE Supplementary Hall Ticket 2021 Download

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.