10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் இன்று வெளியீடு!!

மதிப்பெண் சான்றிதழ்:

10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று ( ஆகஸ்ட் 23) காலை 11 மணிக்கு  10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டது.  அத்துடன், உயர்கல்வி சேர்க்கைக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம்:

பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு அறிவிப்பு:

இந்நிலையில், 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!