10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாட செய்முறைத்தேர்வுக்கு தனித்தேர்வுகள் பெயர்களை பதிவு செய்ய நாளை முதல் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

செய்முறைத் தேர்வு:

மாணவர்கள் செய்முறை தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தினை இணையதளத்தில் நவம்பர் 18 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தனித்தேர்வர்கள் 85 சதவிகிதம் வருகை தந்தவர்கள் மட்டுமே நடப்பு கல்வி ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள்  மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு தேர்வு நடக்கும் தேதி மற்றும் மையங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் கட்டாயம் செய்முறைத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!