12ம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுகளை எலுதலாம் என கல்வித்துறை அறிவிப்பு!!

தேர்வு ஒத்திவைப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால்  கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த வருட கல்வியாண்டில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று  காரணத்தினால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு முக்கிய வினாக்கள், அலகு தேர்வுகளுக்கு உரிய பாடங்கள் அனுப்பப்படும். 12ம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்விற்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்வித்துறை இயக்குனர் தெரிவிப்பு:

நடப்பு கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டிற்காண பணிகளுக்கு தேவைப்பட்டால் ஆசிரியர்களை வரவழைத்துக் கொள்ளலாம். மேலும் மற்ற நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கு வருகை புரிய கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.