இப்பொது இருக்கும் மாணவ மாணவிகளிடையே புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எனவே அதனை கருத்தில் கொண்டு அதை மேம்படுத்துவதற்காக கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மேற்கொண்ட புதுமையான விஷயம் என்னவென்றால் எந்த மாணவர் 1,330 திருக்குறள் சொல்கிறாரார்களோ அவர்களுக்கு கல்வி கட்டணம் மூன்று ஆண்டுகளும் இலவசம் என தெரிவித்துள்ளது.
1,330 திருக்குறள் கூறினால் 3 ஆண்டுகளுக்கு இலவசம்:
தற்போது இருக்கும் மாணவர்கள் தமிழ் மீது ஆர்வம் குறைந்து வருவதாலும் புத்தகம் வாசிக்கும் பலன்கள் அழிந்து வருவதாலும் அதனை மீண்டும் பழக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த காலத்து இளைஞர்கள் நாள் முழுவதும் மொபைல் போனில் கேம் விளையாடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரிமாறுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதனாலும் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி புதுமையான திட்டம்கொண்டு வந்தது. இதன் மூலம் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு போன்ற நற்குணங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் திருக்குறளில் இருக்கும் 1330 குறள்களையும் ஒப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒப்பிக்கும் தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்லூரியின் மூன்று ஆண்டுகளுக்கும் இலவசமா படிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த புதுமையான தகவல் அறிவிப்புகள் மாணவ மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.