தமிழகத்தில் 15 IPS அதிகாரிகள் பணி மாற்றம்!!

தமிழகத்தில் 15 IPS அதிகாரிகள் பணி மாற்றம்!!

தமிழகத்தில் தற்போது, முதல்வராக பொறுப்பேற்று கொண்ட ஸ்டாலின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார் . அந்த வகையில் தற்போது மேலும் 15 அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம்:

தமிழகத்தில் பணியாற்றி வந்த 15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இடமாற்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயந்த் முரளி என்ற அதிகாரி ஆயுதப்படை ஏடிஜிபியாகவும்,  லோகநாதன் என்பவர் ஐஜியாகவும், நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, மேலும் பிரதீப் வி.பிலிப் என்பவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராகவும், ஜெயராமன் என்பவர் தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணயத்தின் ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ்குமாரும், ஐஜியாக தினகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக பணியில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.