+2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு!!

அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:

12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் www.dge.tn.gov.in இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் அதற்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலரிடம் பணமாக செலுத்துமாறும் கூறப்பட்டது. அவ்வாறு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!