பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 21 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

கடந்த தேர்வுகளை போன்ற நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்ற  கோரிக்கை மாணவர்களின் மத்தியில் எழுந்தது. இதனை ஏற்க மறுத்த உயர்கல்வித்துறை, நேரடி முறையிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி ஆன்லைன் தேர்வுக்கு தயாராகும் விதமாக அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு தேதி தற்போது மாற்றம் செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!