தமிழகத்தில் 22 கோவில்கள் மூடல்!! பக்தர்கள் ஏமாற்றம்!!

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு: 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது.

கோவில்கள் மூடல்:

ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பல்வேறு திருவிழாக்கள் வரிசையாக நடைபெறும். அதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 22 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

22 தடை செய்யப்பட்ட கோவில்கள்:

  1. அதன்படி மீனாட்சி அம்மன் கோவில்
  2. திருப்பரங்குன்றம் அழகர்கோவில்
  3. பழமுதிர்சோலை
  4. வண்டியூர் மாரியம்மன்
  5. பாண்டி முனீஸ்வரர்

உட்பட 22 கோவில்களில் நேற்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

அதுமட்டுமில்லாமல் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் குவிந்ததால், சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!