இரண்டு நாட்களுக்கு 24 மணிநேர பேருந்து சேவை – அரசு அறிவிப்பு!

மே மாதம் 10 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் முழு ஊரங்கு அமலுக்கு வர உள்ளதால் மே 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி 24 மணி நேர பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக வீசி வருவதால் அதன் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 4 மணி முதல்  24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமலுக்கு வர இருப்பதால் இன்றும் நாளையும் கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.