தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி திட்டம்!!!

தடுப்பூசி செலுத்தும் திட்டம்:

இந்தியாவில் முதன்முறையாக  தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துக் கல்லூரிகள் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.

மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம்:

  • சென்னையை பொறுத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட  மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அப்போலோ மருத்துவமனை மூலம் கோவாக்சின் 2 வது  தவணை  தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் இந்த வாரம் தொடங்கும்.

அமைச்சர் திறந்து வைப்பு:

கொரோனா 3 ஆம் அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்பதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையத்துடன் கூடுலாக 15 படுகைகளுடன் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவையும் அமைச்சர் திறந்துவைத்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!