பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – பள்ளிக்கல்வி ஆணையர் கோரிக்கை!!

பள்ளிக்கல்வி ஆணையர் கோரிக்கை:

தமிழகத்தில் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை (16.10.2021) விடுமுறை அளிக்க கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை ஒன்றினை மனு அளித்துள்ளார்.

விடுமுறை:

தற்போது பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை இன்றி வாரத்தில் 6 நாட்களும் இயங்குகிறது. தற்போது பூஜை தினங்களை முன்னிட்டு வியாழன், வெள்ளி தொடர் விடுமுறைகளுக்கிடையில் அந்த 16.10.2021 சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது.

தொடர் விடுமுறை என்பதால் மாணவர்களுடைய வருகையும் கணிசமாக குறைந்துவிடும் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள். இடையில் வருகின்ற அந்த ஒரு நாளுக்கு அதாவது 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கினால் ஆசிரியர் பெருமக்களுக்கும் , மாணவ செல்வங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

ஆகவே அருள்கூர்ந்து எங்களின் இந்த நியானமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!