அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி 34% ஆக உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வினால் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

34% ஆக DA உயர்வு:

ஜனவரி மாதத்தில் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட 31% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 34% ஆக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதியமைச்சக வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

இத்தகைய அகவிலைப்படி உயர்வு தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் தீபாவளி பண்டிகை போனஸை தொடர்ந்து தற்போது புத்தாண்டுக்கு மற்றுமொரு போனஸ் வழங்கப்பட உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அவ்வாறு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டால் எவ்வளவு சம்பளம் உயரும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஊதிய விபரம்:

  • அடிப்படை ஊதியம்: 18,000
  • 31% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.5,580
  • 34% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.6,120

31% க்கும், 34% க்கும் உள்ள வித்தியாசம் மாதத்திற்கு ரூ.540 எனில் வருடத்திற்கு ரூ.6,480 ஊதிய உயர்வு கிடைக்கும்.

  • அடிப்படை ஊதியம்: ரூ.56,900
  • 31% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.17,639
  • 34% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.19,346

31% க்கும், 34% க்கும் உள்ள வித்தியாசம் மாதத்திற்கு ரூ.1,707 எனில் வருடத்திற்கு ரூ.20,484 ஊதிய உயர்வு கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!