தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழக அரசு அறிவிப்பு:

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமையும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

 தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்தால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நவம்பர் 4, 5, 6, 7 என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தனியார் அலுவலகங்கள் நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!