உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு!!

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க பள்ளி கல்வித்துறைக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை:

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 5, 6 மற்றும் 8, 9 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் சென்றதால் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!