ஜூன் 15 வரை 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசம் என அறிவித்துள்ளனர்,,

ஜூன் 15 வரை 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசம்: மத்திய அரசு அறிவிப்பு!!

தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்களுக்கும் 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலவச தடுப்பூசி திட்டம்;

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் அடிப்படையில் ஜனவரி 16 முதல் கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதர பணியாளர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாகவும், இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் நாளை (மே 20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டமாக செலுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து நேரடியாக 4.87 கோடி தடுப்பு மருந்துகள் கிடைக்கிறது. மேலும் மத்திய அரசு தரும் இந்த இலவச டோஸ்களை, மாவட்ட வாரியாக மையங்கள் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட வேண்டும்.

மேலும் கோவின் செயலி மற்றும் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும். இதற்கான கால அட்டவணையை அனைத்து மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் கோவின் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பொது மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் கடிதம் வழியாக விரிவான தகவல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.