அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!!

விடுமுறை பட்டியல்:

நவம்பர் மாதத்தில் அடுத்து வரவிருக்கும் 2 வாரங்களில் ஏதேனும் வங்கிக் கிளைகளுக்கு சென்று சேவைகளை மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்காட்டியை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட தேதிகளில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

  • நவம்பர் 1 – கன்னட ராஜ்யோஸ்தவா, குட் காரணமாக பெங்களூரு மற்றும் இம்பால் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 3 – நரக சதுர்தசியை முன்னிட்டு பெங்களூருவில் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.
  • நவம்பர் 4 – தீபாவளி அமாவாசை, லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா , லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • நவம்பர் 5 – தீபாவளி, பாலி பிரதிபதா, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம், கோவர்தன் பூஜை காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 6 – பாய் துஜ், சித்ரகுப்த் ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, தீபாவளி, நிங்கோல் சக்கௌபா காரணமாக காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லாவில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • நவம்பர் 7 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • நவம்பர் 13 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை.
  • நவம்பர் 14 – ஞாயிறு, பொது விடுமுறை.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!