தமிழகத்தின் 4 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

தமிழகத்தில் குன்னூர் மற்றும் தாராபுரத்தில் உள்ள 4 பள்ளிகளை சேர்ந்த சுமார் 48 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

இதை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த 21 மாணவிகள் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அம்மாணவிகள் அனைவரும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பள்ளியை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளிக்கு 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த 27 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் அப்பள்ளிக்கும் 3 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!