38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள்!! முதல்வர் அறிவிப்பு!!

அரசாணை வெளியீடு:

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற  ஏழ்மை நிலையில் உள்ள  பெண்களுக்கு செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள் வழங்க 75 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது  எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத் துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!