தமிழகத்தில் புதிதாக 500 மருத்துவ டாக்டர் நியமனம்!!

தமிழகத்தில் புதிதாக 500 மருத்துவ டாக்டர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு !!

வெளிநாட்டில் இருந்து படித்த 500 மருத்துவம் டாக்டர் நியமனம்  சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி, புதிய மருத்துவர்களாக கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு இன்று பணியமர்த்தியுள்ளது.

மருத்துவர்கள் நியமனம்:

தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், நம் நாட்டில் மருத்துவ கல்வி இயக்குநரகம் கீழ் ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்ற விதியை அரசு தற்போது தளர்த்தியுள்ளது. மேலும் பயிற்சியின் போது அவர்கள் 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியையும் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவர்களின் தேவை அதிகரிப்பதால் அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.