‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5 நாட்களில் 50,000 தன்னார்வலர்கள் பதிவு!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக இந்த திட்டம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க 12ம் வகுப்பு வரை தன்னார்வலர்கள் படித்திருந்தால் போதும். தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்க தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!