வங்கி கடன் EMI செலுத்த 6 மாத கால அவகாசம் – முதல்வர் கடிதம்!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால். நம் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க கோரி பிரதமர் மோடி மற்றும் ரிசெர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்கி தவணை ரத்து:

நம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கோரனாவின் தாக்கம் அதிவேகமாக பரவி உள்ளது. மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். நம் நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருட இழப்புகளை ஈடு செய்வதற்குள் அடுத்த இழப்புகள் உருவாகி விட்டது. மக்களுக்கு வருமானம் இல்ல்லாததால் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறு, குறு வணிக நிறுவனங்கள் வாங்கிய கடன் தவணையை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்மேலும் ஆட்டோ, கால் டாக்சி வைத்திருப்பவர்கள் தங்கள் கடன் தவணையை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் 6 மாத காலத்திற்கு இஎம்ஐ, வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.