6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கம் முதலே நேரடி வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி பள்ளிகளில் வகுப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தேர்வுகள், கால அட்டவணை விடுமுறை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  மாணவர்களிடையே ஏற்பட்ட குறைபாடுகளை களைய பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் பல மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக  தற்போது  6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26ல் தொடங்கி 30ம் தேதி வரை நடைமுறை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிவடைந்த உடன் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அக்டோபர் 6ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த கால அட்டவணைப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலிக்க மாவட்ட, வட்டார  கல்வி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு அட்டவணை 2022:

அதன்படி, வரும் செப்டம்பர் 26ல் துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், அக்.,1ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் அக்.,6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Day & Date10th STD 9:30 Am to 12:30 PM9th STD 9:30 AM to 12:00 Noon6th/7th/8th2:00 Pm to 4:00 PM
26.09.2022LanguageLanguageLanguage
27.09.2022EnglishEnglishEnglish
28.09.2022MathsMathsMaths
29.09.2022ScienceScienceScience
30.09.2022Social ScienceSocial ScienceSocial Science