அறிவியல் திறனறித் தேர்வுக்கு 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்களே விண்ணப்பிக்க தயாரா!!

6 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு:

மாணவர்கள் அவற்றில் பயிற்சி பெறலாம். www.vvm.org.in என்ற இணையதளம் வாயிலாக அறிவியல் திறனறித் தேர்வுக்கு அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

தேர்வு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும்.

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ச்சி பெறுவோர்க்கு பரிசு தொகை:

தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என பரிசுத்தொகை வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறுவார். தேசிய அறிவியல் திறனறித் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 94433 02944 மற்றும் 98949 26925 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!