தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு!

தமிழக அரசு இன்று ஆலோசனை:

அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளியில் பயில கூடிய ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர்.

தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள்: 

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கல்வித் தொலைக்காட்சியை அறிமுகம்படுத்தி  அதன் மூலம் பாடம் கற்பித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு செயல்படுத்திய நிலையில், தற்போது திமுக அரசு தொழிற்படிப்புகளில் இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றவுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!