7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை!!

கல்வி இயக்குனரகம் தெரிவிப்பு:

தமிழக அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

கட்டணம் வசூலிக்க தடை:

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு பெற தகுதி உடையவர்களாக என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் அரசுப்பள்ளியை சேர்ந்த 6,000 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களில், 4,920 மாணவர்கள் தனியார் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நடப்பு ஆண்டில் அரசின் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். ஆனால் இது குறித்த அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை கட்டணம் செலுத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசின் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களிடம் எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!