மதுரை காமராஜர் பல்கலைக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

நிர்வாகம் அறிவிப்பு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

7 நாட்கள் விடுமுறை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பயிலும் 2 மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை சந்தேகித்து மாணவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 மாணவர்களும் விடுதியில் தங்கி பயில்வதால் அவர்களுடன் தங்கியிருக்கும் 247 சக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பல்கலை ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த 247 மாணவர்களுடன் தொடர்புடைய மற்ற சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய பல்கலை நிர்வாகம் தொடர்ந்து ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தவும் பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!