தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து கழக இயக்குநர் தகவல்:

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களின் நலன் கருதி 832 அரசு விரைவுப் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு மேற்கொள்ளலாம். இதுவரையில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் நவ.2ம் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3 ஆம் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும் இணையதளத்தில் முன்பதிவு மேற்கொள்ளும் வசதி வந்தவுடன் கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக சென்று டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!