தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்று மாலையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.

அதுமட்டும்மில்லாமல் சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பியுள்ளது. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோயம்பேட்டிலிருந்து தினந்தோறும் 2200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளைய சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள், சுபகாரியங்கள் நடைபெற உள்ளது.

மேலும், இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அத்துடன் இந்த சிறப்பு பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!