9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் (25.12.2021) 2022 ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விடுமுறை:

பருவ மழை காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 17ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நடுநிலை வகுப்புகளுக்கும் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பரவலால் அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது, அடுத்து மழை காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தால் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!