ரேஷன் கார்டு – ஆதார் எண்ணுடன் இணைப்பு குறித்து அரசு விளக்கம்!!

நாட்டில் இதுவரை 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டு- ஆதார் எண் இணைப்பு:

ரேஷன் கார்டு- ஆதார் எண் இணைப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 21.91 கோடி ரேசன் கார்டுகளை, அதாவது 92.8 சதவீத குடும்ப அட்டைகளை ஆதாா் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்து விட்டன.

ஆதார் – ரேஷன் இணைப்பு திட்டம்:

இந்தியாவில் அரசு வழங்கும் குறைந்த விலை அத்தியாவசிய பொருட்களை பெற, அனைத்து மாநில அரசுகளும் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை பெற்று பயனடைகின்றனர்.

தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ஊரடங்கு காலத்தில் பயன் பெற்றனர். மத்திய அரசு நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஆதாருடன் ரேஷன் கார்டுகளை இணைக்கும் பணி:

இந்த ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டில் 5.38 லட்சம் ரேஷன் கடைகள் செயல்பாட்டில் உள்ளது.  அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதாருடன் ரேஷன் கார்டுகளை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மாநிலங்களவையில் கேட்கப்படும் கேள்விகள்:

மேலும் நாட்டில் உள்ள 4.98 லட்சம் ரேஷன் கடைகளில் 92.7 சதவீதம் மின்னணு விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகள் உள்ளதாகவும் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்துகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!