தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!

கல்விச்செலவு

தமிழக அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் பயின்று மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது. அதாவது, இலவச புத்தகங்கள், சைக்கிள், இலவச மடிக்கணினி, இலவச சீருடைகள் மற்றும் பலவிதமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

இது போக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வப்போது புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

சமீபத்தில் கூட அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடர இருக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு கூடிய விரைவில் மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 செலுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் அரசு பள்ளியிலேயே படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய அரசாணை பல அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!