ரேஷன் கடைகளில் இனி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் என புதிய திட்டம் அறிமுகம்!

ரேஷன் கடைகளில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட போவதாக அரசு அறிவித்தது. இதன் மூலம் கடைகளுக்கு அருகில் உள்ள மக்கள் இணைய சேவையை எளிதாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பணம் செலுத்துவதில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வைஃபை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் அந்த கடைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இணையதள சேவை பெற முடியும்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கு G PAY செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை அண்ணா நகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் G PAY மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்கள் பெறும் முறையை கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி இதுவரை 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!