தமிழக அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஓர் அறிவிப்பு – உயர்நீதிமன்றம் வெளியீடு!

உயர்நீதிமன்றம்:

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆண்டு தோறும் அரசு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள். தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் இந்தியா முழுவதும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து முக்கிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இத தவிர அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது. மேலும் நிலுவையில் தொகைகளை செலுத்துவது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசனைகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2006, 2007ம் ஆண்டுகளில் அரசுத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு துறையிலும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்ற தகவலை தர தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண்துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தர உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!