தேர்வு முறைகேடு குறித்து குழு அமைத்துஅறிக்கை பெற நடவடிக்கை!!

சென்னை பல்கலைக்கழகம் தெரிவிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் சேராமலேயே 117 பேர் பட்டம் பெற முயன்றது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் சென்னை பல்கலைக்கழக சட்டப் படிப்புகள் துறை பேராசிரியர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இக்குழு விசாரணை செய்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவு. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!