வாக்காளா் வரைவு பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் நவ.30 வரை நடைபெறும்!!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நேற்று தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேர் வாக்காளா்களாக உள்ளனா். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் மற்றும் பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மேலும் 7 ஆயிரத்து 342 பேர் மூன்றாம் பாலினத்தவா்கள் என்று வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவ.13, 14 மற்றும் 27, 28 என 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை வழங்கலாம். இதுதவிர, அனைத்து அலுவலக நாட்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு உதவி அலுவலர்களிடமும் வழங்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in மற்றும் VOTER HELP LINE கைபேசி செயலியிலும் பதிவு செய்யலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் 6ஏ என்ற படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!