வேளாண் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்!!

பல்கலைகழகம் தெரிவிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் (02.10.2021) துவங்குகிறது. இதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  என்று பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

நடப்பாண்டு முதல் வேளாண் பல்கலையின் இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

இணையதளத்தில் உள்ள கையேட்டை பதிவிறக்கம் செய்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது 0422- 6611322 / 6611328 / 6611345 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். வேளாண் பட்டய படிப்புகளில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://tnau.ac.in/diplomaadmission வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!