தமிழகத்தில் மருந்தாளுனர், நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்!!

தமிழகத்தில் மருந்தாளுனர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கூறப்பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தினை 18.11.2021 முதல் 10.12.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நாளன்று மாலை 5 மணிக்கு மேல் அலுவலக முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் www.tnhealth.tn.gov.in என்னும் அலுவலக முகவரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இது குறித்த தெளிவான மற்றும் விவரமான அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த மருந்தாளுனர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு குறித்த தகவல் கையேடு, அரசு பள்ளி விவரம், விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் விண்ணப்ப கட்டணம், மதிப்பெண் அடிப்படையிலான தகுதி, படிப்புகளின் விவரம், சிறப்புப் பிரிவினர், கட்டணம் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!