அரசு பள்ளிகளில் குவியும் மாணவர்கள் சேர்க்கை!! அதிகாரிகள் தகவல்!!

அரசு மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு:

சென்னையில் மாணவர்கள் வீடுகளில் இருந்து படித்து வருகிறார்கள். பொது முடக்கத்தால் பெரும்பாலான பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்கின்றன.

அரசு பள்ளிகளில் அதிகமாகும் மாணவர் சேர்க்கை:

இதனால் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இந்த வருடமும் கடந்த வருடத்தை காட்டிலும் மாணவர்கள் அதிகளவு சேர்ந்துள்ளனர்.

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் மட்டும் 12 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணமும், படிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுவதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!