அட்மிட் கார்டு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு இன்னும் 3 நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் அட்மிட் கார்டுகள் செப்டம்பர் வரும் 9ஆம் தேதி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்திலிருந்து நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான நீட் PG நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டுகள் செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது நீட் UG தேர்வுக்கான அட்மிட் கார்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய,
- முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
- அதன் முகப்பு பக்கத்தில், நீட் UG அட்மிட் கார்டுகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
- login பக்கத்தில், கேட்கப்பட்ட சான்றுகளை உள்ளிடவும்.
- இப்போது நீட் UG 2021 க்கான Admit Card திரையில் தோன்றும்.
- அதனை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய குறிப்பு:
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!