மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து வரும் டிச.28ம் தேதி ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழுநேர வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு நேர வகுப்புகள்:

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு டிச.27 முதல் டிச.31ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.3ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேர்வுக்கான பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் வரும் ஜன.3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பரவி வரும் ஓமிக்ரான் தொற்று காரணமாக வரும் ஜன.3ம் தேதி முதல் முழுநேர வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கை குறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் டிச.28ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!