TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு கோரிக்கை!!

ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் தெரிவிப்பு:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பை உயர்த்த வேண்டும், என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு தெரிவித்தார்.

ஆசிரியர்கான வயது வரம்பு:

தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வேலையில்லா முதுகலைப் பட்டதாரிகள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த அறிவிப்பில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் முதுநிலைப் பட்டதாரிகளின் வயது வரம்பு 40 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் 59 வயது வரை உள்ள முதுகலை பட்டதாரிகள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!